பக்கம் எண் :

119


 

எளிய வாழ்க்கை
 

நெற்றி வியர்வை நிலத்தில்விழ
     நித்தம் உழைக்கும் உழவருமே
கட்டி யிருந்த கந்தலையே
     கண்டனர் காந்தி மதுரையிலே.

வாடிடும் உழவர் நிலைமைகண்டு
     வருந்திய காந்தியும், அன்றுமுதல்
ஆடை குறைக்க முடிவுசெய்தே,
     அணிந்தனர் நாலு முழவேட்டி.

நித்தமும் கீதை படித்திடுவார்.
     நெஞ்சாரப் பிரார்த்தனை செய்திடுவார்.
புத்தரும், ஏசுவும், நபிகளுமே
     போதித்த உண்மை எடுத்துரைப்பார்.