பக்கம் எண் :

120

“தாய்ப்பால் போலே அவசியமாம்
     தாய்மொழி” என்றே உணர்த்திவந்தார்.
*தாய்மொழி தன்னில் சுயசரிதை
     ‘சத்திய சோதனை’ எழுதிவைத்தார்.

பற்பல மொழிகளைத் தெரிந்துகொண்டார்;
     படிக்கவும் எழுதவும் அறிந்துகொண்டார்.
நற்றமிழ் மொழியையும் கற்றுவந்தாார்.
     நாவாரத் தமிழைப் புகழ்ந்துவந்தார்.

கடமைகள் மணிப்படி செய்துவந்தார்.
     காலத்தைப் பொன்னாய்க் கருதிவந்தார்.
அடக்கமாய் என்றுமே வாழ்ந்துவந்தார்.
     அளவோடு செலவுகள் செய்துவந்தார்.

ஆட்டுப் பாலுடன் வேர்க்கடலை
     அனுதினம் காந்திஜி உண்டுவந்தார்.
நாட்டு மருத்துவ முறைகளிலே,
     நலிந்த உடலையும் காத்துவந்தார்.

* குஜராத்தி மொழி