பக்கம் எண் :

127


 

வெள்ளையனே, வெளியேறு!
 

வெள்ளையர் வெற்றி பெற்றிடவே-நம்
     வீரர் உயிரைக் கொடுப்பதுவோ?
உள்ளம் கொதித்தனர் இந்தியர்கள்-எல்லா
     ஊரிலும் கிளர்ச்சிகள் செய்தனரே.

“போரில் இந்தியர் உதவிசெய்தால்-நாங்கள்
     பொன்னான விடுதலை தருவோம்” என்றே
கூறினர் வெள்ளையர். ஆயினுமே-காந்தி
     கொஞ்சமும் அவர்களை நம்பவில்லை.