“விடுதலை தாருங்கள். இல்லையெனில்-உடன் வெளியேறிச் செல்லுங்கள், நாட்டைவிட்டே. படையோடு அந்நியர் வந்திடினும்-எங்கள் பாரத நாட்டினைக் காப்போம்” என்றார். தொல்லைகள் தீரவே வெள்ளையரின்-ஆட்சி தொலைந்திட காந்தி விரும்பினராம். ‘வெள்ளைய னேவெளி யேறு’என்றே-அவர் வீர முழக்கமும் செய்தனராம். ‘வெள்ளைய னேவெளி யேறு’என்றே-மக்கள் வீதிகள் எங்கும் முழங்கினராம். பள்ளியில் சென்று படித்துவரும்-சிறு பாலரும் கூடச் சேர்ந்தனராம் |  | | |
|
|