பக்கம் எண் :

134


 

“அன்னையாம் நாட்டைப் பிளப்பதுவோ!
     அண்ணனும் தம்பியும் பிரிவதுவோ!
ஒன்று பட்டாலே உயர்வடைவோம்;
     உணருவீர்” என்றார் காந்தியுமே.

ஒன்றாக வாழ நினைக்கவில்லை.
     உறவையும் அவர்கள் மதிக்கவில்லை.
அன்றாடம் கலகம் நடந்ததுவே.
     அதுகண்டு காந்தி கலங்கினரே.