உரிமைகள் பெற்றிட வெள்ளையரை ஒன்றாய் எதிர்த்த சகோதரர்கள் அருமையாம் விடுதலை நெருங்குகையில் ஐயோ, தமக்குள் அடித்துக்கொண்டார்! மனிதரை மனிதரே குத்துவதை, வாளினால் வெட்டி வீழ்த்துவதை, புனிதராம் காந்திஜி கேட்டதும், புழுவெனத் துடியாய்த் துடித்தனரே. பெருமை மிகுந்தஇம் மண்ணினிலே பிறந்து வளர்ந்தவர் தங்களுக்குள் சிறிதுமே ஒற்றுமை யில்லாமல் சிந்திய ரத்தமும் கொஞ்சமில்லை! வங்காளம், பீகார் மாநிலத்தில் மக்கள் கலகம் அடங்கிடவே, அங்கெல்லாம் காந்தி நடந்தனரே. அல்லும் பகலும் அலைந்தனரே. ஊரில் கலகம் அடங்கிடவே உயிரையும் கூட மதியாமல், தீரமாய் வெறியர் மத்தியிலும் சென்றனர் அண்ணல் காந்தியுமே. | | |
|
|