தள்ளாத வயதிலே கோல்ஊன்றித் தளர்நடை போட்டு காந்திமகான் பொல்லாத வெறியர் மத்தியிலே புகுந்துமே அன்பைப் பரப்பினராம். என்னதான் காந்தி எடுத்துரைத்தும் “இந்திய நாட்டைப் பிரித்திடுவீர்” என்றுமே லீகினர் கூறிவந்தார். இம்மியும் விட்டுக் கொடுக்கவில்லை! கலகம் அடங்கினால் போதுமென்றே கடைசியில் இந்தியக் காங்கிரசின் தலைவர்கள் சம்மதம் தந்துவிட்டார், தாய்த்திரு நாட்டைப் பிரிப்பதற்கே. பாரதம், பாகிஸ்தான் நாடுகளாய்ப் பாகப் பிரிவினை செய்துவிட்டார்! வேறு வழியின்றி காந்தியுமே வேதனை தன்னைப் பொறுத்திருந்தார். | | |
|
|