பக்கம் எண் :

138


 

விடுதலை பெற்றோம்
 

வெள்ளையர் ஆட்சி முடிந்ததென
     விடுதலை நாமும் அடைந்தோமென,
துள்ளிக் குதித்தனர் சிறுவரெல்லாம்;
     சுதந்திர நாளைக்கொண் டாடினரே.

சின்னஞ் சிறுவர்கள் யாவருமே
     சேர்ந்தனர் பள்ளியில் ஒன்றாக.
வண்ண வண்ணப்பூ, காகிதத்தால்
     வகைவகை யாக அலங்கரித்தார்.

சட்டையில் சின்னக் கொடிஅணிந்து,
     தாயின் மணிக்கொடி ஏற்றிவைத்து
சுற்றிலும் நின்று வணங்கினரே;
     சுதந்திர தேவியை வாழ்த்தினரே.