பக்கம் எண் :

139

ஏழை எளியோரும் செல்வர்களும்
     இனிதாய்க் கூடிக்கொண் டாடினரே.
வாழை மரங்களை நட்டனரே.
     வாசலில் கோலங்கள் இட்டனரே.

வழியெல்லாம் தோரணம் கட்டினரே.
     வளைவுகள் எங்கும் அமைத்தனரே.
அழகு படுத்தினர் ஊரையெல்லாம்
     ஆனந்தம் பொங்கி வழிந்ததுவே.

கற்கண்டு, மிட்டாய் வழங்கினரே.
     கதர்உடை கட்டி மகிழ்ந்தனரே.
அற்புதம் செய்தனர் காந்திஎன்றே
     அகிலம் முழுவதும் போற்றியதே