பக்கம் எண் :

140

சுதந்திரம் வாங்கியே தந்தவராம்
     தூயவர் காந்தி படத்தினையே
விதவித மாக அழகுசெய்தே
     வீடுகள் தோறும் வணங்கினரே.
 


 

ஊர்வலம் வந்தனர் அணிஅணியாய்
     உயர்த்திப் பிடித்த கொடிகளுடன்.
பாரத தேசத் தந்தையினைப்
     பலகோடி உள்ளங்கள் வாழ்த்தினவே.