தேசம் விடுதலை பெற்றிடவே தியாகம் புரிந்தோர் அனைவரையும் பாசத் துடன்மக்கள் போற்றினரே. பாடிப் புகழைப் பரப்பினரே. ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே’ என்றநம் பாரதி வாக்கினையே எல்லாரும் எண்ணித் தலைநிமிர்ந்தார். ‘எவர்க்கும் அடிமைநாம் இல்லை’யென்றார். குண்டு, துப்பாக்கிகள் ஏதுமில்லை. கோரமாய் யுத்தமும் செய்யவில்லை. அண்ணலாம் காந்திஜி காட்டிவந்த அகிம்சை வழியிலே வெற்றிபெற்றோம். கத்திகள் ஏதுமே வீசவில்லை. காத்திடக் கேடயம் ஏந்தவில்லை. யுத்த களத்திலும் நிற்கவில்லை. உத்தம வழியிலே வெற்றிபெற்றோம். சாந்தப் போரிலே வெற்றிபெற்றோம். சத்தியப் போரிலே வெற்றிபெற்றோம். காந்தி வழியிலே வெற்றிபெற்றோம். கருணை வழியிலே வெற்றிபெற்றோம். | | |
|
|