 | கண்ணன் சொல்கிறான் | காந்தி கதையைக் கேட்டேன்-அண்ணா கண் கலங்கி விட்டேன். சாந்த மூர்த்தி வழியே-என்றும் தங்க மான வழியாம். உண்மை, அகிம்சை இரண்டும்-அவர் உயர்ந்த கொள்கை ஆகும். கண்ணைப் போல அவற்றை-நானும் கருதிக் காத்து வருவேன். மாந்த ருக்குள் தெய்வம்-அவர் வழியைப் போற்றி நடப்பேன். காந்தி போல வாழ்வேன்-நல்ல கருணை மனிதன் ஆவேன். | | |
|
|