பக்கம் எண் :

18

அண்ணன் அங்கே வந்தார்-“தம்பி,
     அருமை யான மாலை!
அண்ணல் காந்தி கழுத்தில்-சூட்டி
     அழகு பார்ப்போம்” என்றார்.

அண்ணன் கையைப் பிடித்தான்-தம்பி
     ஆவ லாக நடந்தான்.
கண்ணைக் கவரும் பூங்கா-அதில்
     காந்தி சிலையைக் கண்டான்.

அண்ணன் தோளில் ஏறி-தம்பி
     அழகு மாலை போட்டான்.
கண்ணை மூடித் தொழுதான்-அந்தக்
     காந்தி சிலையின் முன்னே.

அண்ணன் அருகில் கண்ணன்-சிலை
     அடியில் அமர்ந்து கொண்டான்.
எண்ணிப் பார்த்தான் ஏதோ-உடன்
     ஏக்கத் தோடு கேட்டான்;