பக்கம் எண் :

19

கண்ணனின் ஆசை
 

அண்ணா, அண்ணா, காந்தித் தாத்தா
     அருகில் சென்ற துண்டோ?-நீ
     அவரைப் பார்த்த துண்டோ?

கண்ணா, இந்தக் கண்ணா லேயே
     காந்தி ஜியைக் கண்டேன்-என்
     கண் குளிரக் கண்டேன்.

அண்ணா, அண்ணா, உன்னைப் போல
     அதிட்டம் எனக்கே இல்லை-நான்
     அவரைப் பார்த்த தில்லை.