பக்கம் எண் :

23


 

அம்மாவும் அப்பாவும்
 

போர்பந்தர் என்னும்ஓர் ஊரினிலே-நல்ல]
     புத்திலி பாயின் வயிற்றினிலே
பார்புகழ் காந்தி பிறந்தனராம்-எல்லாப்
     பையன்கள் போலே வளர்ந்தனராம்.

காந்தியின் அப்பாபேர் காபாகாந்தி-அவர்
     கற்றதோ ஐந்தாம் வகுப்புவரை.
வேந்தர்க்கும் யோசனை கூறுகின்ற-திவான்
     வேலையைப் பார்த்துமே வந்தனராம்.