பக்கம் எண் :

24

படிப்பிலே புலியாய் இருக்கவில்லை-காந்தி
     பரீட்சையில் முதன்மை பெறவும் இல்லை.
நடுத்தர மாகவே இருந்துவந்தார்-ஆனால்
     ‘நல்லவன்’ என்றே பெயர்எடுத்தார்.

சின்ன வயதிலே காந்திமகான்-பல
     சிறந்த குணங்களைக் கற்றனராம்.
என்றும் அவற்றைக் கடைப்பிடித்தே-அவர்
     எல்லார் நெஞ்சிலும் வாழ்ந்தனராம்.