பக்கம் எண் :

28


 

அப்பாவின் புத்தகம்
 

காந்தியின் தந்தையாம் காபாகாந்தி-அவர்
     கண்ணிய மான ஒருமனிதர்.
சாந்தமும், நேர்மையும் உள்ளவராம்-என்றும்
     சத்தியப் பாதையில் செல்பவராம்.

மேஜைமேல் புத்தகம் ஒன்றைவைத்தே-அவர்
     வெளியினில் சென்றனர், அன்றொருநாள்.
ஆசையாய்க் காந்தி எடுத்தனரே-உடன்
     ஆர்வமாய் அதனைப் படித்தனரே