சிரவணன் என்றொரு மகனிருந்தான்-அவன் தெய்வமாய்ப் பெற்றோரைக் கருதிவந்தான். குருடராய்ப் பெற்றோர் இருந்துவந்தும்-எந்தக் குறையும் இல்லாமலே காத்துவந்தான். கண்ணில்லாத் தாயையும் தந்தையையும்-தோளில் காவடி கட்டியே தூக்கிச்சென்றான்; புண்ணியத் தலங்களைச் சுற்றிவந்தான்-அந்தப் புதல்வனின் கதையைப் படித்ததுமே, அன்னையை, தந்தையை உலகினிலே-மிக அருமையாய்ப் போற்றிட வேண்டுமெனும் உண்மையைக் காந்தி அறிந்தனராம்-அதை உள்ளத்தில் நன்கு பதித்தனராம். |  | | |
|
|