கல்வித் துறையில் வேலை பார்க்கும் கைல்ஸ் என்னும் வெள்ளையர் பள்ளிக் கூடம் வந்தார் அன்று பார்வை யிட்டுச் செல்லவே. வந்து காந்தி அமர்ந்தி ருந்த வகுப்பைப் பார்த்துக் கூறினார்: “ஐந்து வார்த்தை கூறு கின்றேன். ஆங்கி லத்தில் எழுதுவீர்.” ‘கெட்டில்’ என்ற வார்த்தை தன்னைக் கேட்ட வுடனே காந்தியும், சற்றே தயங்கிப் பின்னர் அதனைத் தவறாய் எழுத லாயினர். இதனைக் கண்ட ஆசான் உடனே எடுத்துக் காட்ட வேண்டியே, மெதுவாய்க் காந்தி காலின் மீது மிதித்துச் சைகை காட்டினார். “அருகில் உள்ள பையன் அதனைச் சரியாய் எழுதி இருக்கிறான்; திரும்பிப் பார்த்தே அவனைப் போலத் திருத்த மாக எழுதுவாய்.” | | |
|
|