பக்கம் எண் :

32

என்றே மெதுவாய்ச் சைகை மூலம்
     எடுத்தே ஆசான் காட்டியும்,
ஒன்றும் அறியாக் குழந்தை போல
     உணர்ந்தி டாமல் இருந்தனர்.
 

தம்மைத் தவிர வகுப்பி லுள்ளோர்
     தவறில் லாமல் எழுதினார்,
என்ப தறிந்த காந்தி அதனை
     எண்ணி எண்ணி வருந்தினார்.