பக்கம் எண் :

38

விருந்துகள் பலவும் நடப்பதுவும்,
விதவிதச் செலவுகள் செய்வதுவும்

எனக்கா கத்தான்” எனகாந்தி
எண்ணி எண்ணி மகிழ்ந்தாராம்.

சிறப்புடன் காந்தி-கஸ்தூரி
திருமண வைபவம் நடந்ததுவாம்.

திருமணம் என்றால் என்னவென்றே
தெரியா ததனால் காந்தியுமே,

‘ஆடிப் பாடி விளையாட
அகப்பட் டாளே ஒருதோழி.

இனிமேல் நமக்குக் கவலைஇல்லை’
என்றே எண்ணி மகிழ்ந்தாராம்!