அன்னையின் அனுமதி | பெருமை மிகுந்தநல் தந்தையுமே-ஐயோ! பிரிந்தனர் நோயின் கொடுமையினால். அருமை மகனைப் படிக்கவைத்தே-நல்ல ஆளாக்கத் தாயுமே ஆசைப்பட்டார். “காந்தியைச் சீமைக்க னுப்பிடலாம்-கல்வி கற்றுப் பாரிஸ்டராய் வந்திடுவான். மாந்தரெல் லாரும் மதித்திடுவார்”-என்று வயதான பெரியவர் ஒருவர்சொன்னார். “பாங்குடன் ஆங்கிலம் கற்றிடவும்-காந்தி பாரிஸ்டர் பட்டம் பெற்றிடவும் ஆங்கில நாடு செல்வதுதான்-மிக அழ” கென நண்பரும் கூறினரே. | | |
|
|