விருந்து முடிந்ததும் நண்பர்களில்-சிலர் மெத்தவும் காந்தியை வாழ்த்தினரே. இறுதியில் பையிலே கையைவிட்டு-காந்தி எடுத்தனர் நன்றி உரைதனையே. காகிதம் தன்னை எடுத்ததுமே-அவர் கைகள் இரண்டும் நடுங்கினவே. வேகமாய் வார்த்தைகள் வந்தனவா?-இல்லை; வேர்வை உடம்பை நனைத்ததுவே! தொண்டை அடைத்தது; மேலும் அவர்-சொன்ன சொல்லும் உடைந்து சிதறியதே. நன்றி உரைதனில் என்னசொன்னார்-என்றே நண்பரில் யாருக்கும் புரியவில்லை! நண்பர்கள் மத்தியில் பேசிடவே-அன்று நடுங்கித் திணறிய காந்திமகான் அந்நிய ரும்மிகப் போற்றிடவே-பல ஆயிரங் கூட்டத்தில் பேசிவிட்டார்! |