பக்கம் எண் :

58

எதிர்ப்பு

கடலைக் கடந்து செல்கிறார்
     காந்தி என்று கேட்டதும்,
உடனே அவரின் சாதியார்
     ஒன்று கூடி விட்டனர்.

கூட்டம் நடுவில் காந்தியைக்
     கொண்டு வந்து நிறுத்தினர்.
நீட்டி முழக்கி அவரிடம்
     நீண்ட நேரம் பேசினர்.

“கடலைத் தாண்டிச் செல்வதைக்
     கருதி னாலும் பாவமாம்.
விடுவாய் இந்த எண்ணமே.
     விட்டு விடுவாய்” என்றனர்.

தாண்டிக் கடலைச் செல்வதில்
     தவறே இல்லை என்பதை
வேண்டு மட்டும் அவரிடம்
     விளக்கி காந்தி கூறியும்,