“சாதிக் கட்டுப் பாட்டினைத் தகர்க்கும் உன்னை இன்றுடன் சாதி விட்டு விலக்கியே தள்ளி வைத்தோம்” என்றனர். இன்னும் அந்தச் சாதியில் எவரும் காந்திக் குதவினால், தண்டம் செலுத்த வேண்டுமாம்! தடை விதித்து விட்டனர்! காந்தி இந்த மிரட்டலைக் கண்டும் அஞ்ச வில்லையே. சாந்த மாகத் திரும்பினார்; தமது பயணம் துவக்கினார். |