பக்கம் எண் :

61

என்றே காந்தி கப்பலில்
     எண்ணி மிகவும் தயங்கியே
ஒன்றும் பேசி டாமலே
     ஊமை போல இருந்தனர்.

கப்பல் தன்னில் மாமிசம்
     கலந்த உணவும் தந்ததால்
‘தப்பித் தவறித் தின்றிடின்
     தாயை ஏய்த்த தாகுமே!’

என்ற பயமே மனத்தினில்
     எழுந்த தாலே காந்தியும்
ஒன்றைக் கூடத் தீண்டிடார்;
     ஒதுங்கி ஒதுங்கிச் செல்லுவார்.

பம்பாய் நகரில் வாங்கிய
     பழங்கள் பட்ச ணங்களை
நம்பி அந்தக் கப்பலில்
     நாளை ஓட்டி வந்தனர்.