பக்கம் எண் :

62

நண்பரின் தொப்பி

லண்ட னுக்கு காந்தி வந்த
     நல்ல செய்தி கேட்டதும்,
அன்றே டாக்டர் மேத்தா என்பார்
     அவரைப் பார்க்க வந்தனர்.

வந்த வுடனே தமது தலையில்
     வைத்தி ருந்த தொப்பியை
அந்த நண்பர் கழற்றி வைத்தார்,
     அங்கி ருந்த மேஜையில்.

மிருது வான மயிரி னாலே
     மேன்மை யாகச் செய்ததாம்
அருமைத் தொப்பி யதனைக் காந்தி
     ஆவ லோடு எடுத்தனர்.

தொப்பி தன்னைக் காந்தி கையால்
     தொட்டுத் தடவிப் பார்த்தனர்.
அப்போ தந்தத் தொப்பி மயிரும்
     அடடா, கலைந்து போனதே!