பக்கம் எண் :

63

கலைந்து போன தொப்பி தன்னைக்
     கண்ட வுடனே மெத்தவும்
கலக்கத் தோடு மேத்தா முகத்தைக்
     காந்தி பார்க்க லாயினர்.

“வேற்று மனிதர் பொருளை அவரின்
     விருப்ப மின்றி எடுப்பதே
ஏற்ற தல்ல” என்று கூறி
     இன்னும் அந்த நாட்டிலே,

சிறந்த பழக்க வழக்கம் என்று
     தெரிந்த வற்றை காந்தியும்
அறிந்து கொள்ளும் வகையில் மேத்தா
     அன்பாய் எடுத்துக் கூறினார்.