பக்கம் எண் :

75

சமையல் வேலை
 

வம்பு, வழக்கை எடுத்துக் கூறி
     வாதம் செய்திடும்
வக்கீல் தொழிலை நடத்து தற்கு
     நமது காந்தியும்
பம்பாய் நகரில் ஓரி டத்தில்
     குடி இருந்தனர்.
பலகை ஒன்றில் ‘வக்கீல்’ என்றே
     எழுதி மாட்டினர்.

தன்னந் தனியாய் இருந்த காந்தி
     அந்த வீட்டிலே
சமையல் செய்ய வேலை யாளை
     வைத்துக் கொண்டனர்.