‘என்ன சமையல்? மோசம், மோசம்!’ என்றே காந்தியும் எண்ணும் வகையில் சமையல் செய்தான் தினமும் அவனுமே. சீட்டுக் கொடுத்தே அவனை உடனே வீட்டுக் கனுப்பலாம். செய்ய வில்லை நமது காந்தி அந்தச் செயலையே! வேட்டி தன்னை வரிந்து கட்டிக் கொண்டே அவனுடன் மிகுந்த மகிழ்ச்சி யோடு சமையல் செய்து வந்தனர். இங்கி லாந்தில் இருந்த சமயம் அங்கே உள்ளவர் எண்ணெய் அடுப்பில் சமையல் செய்யும் முறையை நேரிலே நன்கு அறிந்து கொண்ட தாலே நமது காந்தியும் நல்ல முறையில் சமையல் செய்தே உண்டு வந்தனர். | | |
|
|