பக்கம் எண் :

77


 

முதல் வழக்கு
 

உண்மை யற்ற வழக்கை காந்தி
     ஏற்ப தில்லையே.
ஒரு வழக்கும் தரகு கொடுத்துப்
     பிடிப்ப தில்லையே.
இந்த முறையைக் கடைப்பி டித்த
     கார ணத்தினால்
எவரும் அவரைத் தேடிக் கொண்டு
     வருவ தில்லையே!