வழக்கில் லாமல் காந்தி இருந்த அந்த நாளிலே. மம்மி என்னும் அம்மை யாரின் வழக்கு வந்ததே. வழக்கம் போலே அதையும் நன்றாய் ஆய்ந்து பார்த்தனர். வாய்மை யான தென்றே அதனை ஏற்றுக் கொண்டனர். மொத்தம் அந்த வழக்குக் காக மம்மி பாயிடம் மூன்று பத்து ரூபாய் வேண்டும் என்று கேட்டனர். ஒத்துக் கொண்டு காந்தி யிடத்தில் அம்மை யாருமே உடனே பணத்தைக் கொடுத்து வழக்கை நடத்தச் சொல்லினர். அந்த வழக்கு நீதி மன்றம் வந்த நாளிலே ஆஜ ராகிப் பேச, காந்தி எழுந்து நின்றனர். | | |
|
|