என்ன என்ன குறுக்குக் கேள்வி கேட்ப தென்றுமே எண்ணி யிருந்தும் எழுந்த போது பேச வரவில்லை! தொண்டை அடைத்துக் கொண்ட தாலே அங்கே காந்தியும், சொல்வ தேதும் அறிந்தி டாமல் விழிக்க லாயினர். கண்ணி ரண்டும் வேக மாகச் சுழல லாயின. கையும் காலும் கிடுகி டென்று நடுங்க லாயின. இதனைக் கண்டே அந்த நீதி மன்றந் தன்னிலே இருந்த பலரும் வாயை விட்டுச் சிரிக்க லாயினர். அதனால் அதிக வெட்கம் கொண்ட நமது காந்தியும் அமர்ந்து விட்டார் ஆச னத்தில். ஐயோ, பாவமே! | | |
|
|