பக்கம் எண் :

86

அந்தச் சமயம் காந்தியுமே-தென்
     ஆப்பிரிக் காவர வேண்டுமென்றே
வந்தது கடிதம் அண்ணனுக்கே-உடன்
     மகிழ்ச்சி அடைந்தனர் காந்தியுமே

ஆப்பிரிக் காவிலே ஒரு வழக்கு-அது
     அப்துல்லா கம்பெனி யின் வழக்கு.
நாற்பதி னாயிரம் பவுன்வழக்கு-அதை
     நடத்திட இவரை அழைத்தனராம்.

கப்பலில் காந்தியும் ஏறிச்சென்றார்-மிகக்
     களிப்புடன் டர்பன் நகர்அடைந்தார்.
அப்துல்லா துறைமுகம் வந்திருந்தார்-அவர்
     அன்போடு காந்தியைக் கூட்டிச்சென்றார்.