பக்கம் எண் :

87

தலைப்பாகைத் தகராறு
 

ஆப்பிரிக் காவுக்குச் சென்றதுமே
     அடைந்திட்ட தொல்லைகள் பற்பலவாம்.
கேட்பவர் யாருமே இல்லையங்கே.
     கேடுகள் செய்தனர் வெள்ளையர்கள்.

ஆப்பிரிக் காவிலே வாழ்ந்துவந்த
     அருமைநம் இந்தியர் உரிமைகளைக்
காப்பாற்றிக் கொள்ள முடியாமல்
     கலங்கிடக் கண்டனர் காந்தியுமே.