வெளியில் தள்ளினர் | டர்பன் நகரில் முதல் வகுப்புச் சீட்டு வாங்கியே ரயிலில் ஏறிப் பயணம் செய்தார் நமது காந்தியே. நிற்கும் சமயம் வழியில் உள்ள நிலையம் ஒன்றிலே நிமிர்ந்து நடந்து வந்தான் ஒருவன்; வெள்ளைக் காரனே! அந்த வெள்ளைக் காரன் காந்தி இருந்த பெட்டியில் அடிஎ டுத்து வைத்த வுடனே கண்டான் காந்தியை. “இந்தி யன்நீ முதல்வ குப்பில் ஏற லாகுமோ? இறங்கிச் சாமான் வண்டி ஒன்றில் ஏறு” என்றனன். | | |
|
|