“முதல் வகுப்பில் பயணம் செய்யச் சீட்டு வாங்கியும் மூட்டை ஏற்றும் வண்டி தன்னில் ஏற வேண்டுமோ? இதனை நானும் ஏற்க மாட்டேன்” என்று காந்தியும் எதிர்த்துப் பேசி விட்டு, அங்கே அமர்ந்தி ருந்தனர். வெள்ளைக் காரன் பேச்சைக் கேட்டு ரயில்வே அலுவலர் விரைந்து வந்தார், அந்தப் பெட்டி தன்னை நோக்கியே. உள்ளே சென்று காந்தி யாரைப் பார்த்தே உறுமினர். உடனே “இறங்கு, இறங்கு” என்றும் ஆணை யிட்டனர். ‘இறங்க மாட்டேன்’ என்று காந்தி துணிந்து கூறவே இழுத்துத் தள்ளப் போலீஸ் காரர் உதவி கோரினர். | | |
|
|