பக்கம் எண் :

93


 

தொல்லைகள் தொடர்ந்தன!
 

தொல்லைகள் இப்படி எத்தனையோ
     தொடர்கதை போல வளர்ந்தனவாம்.
நல்லவ ரான இந்தியர்கள்
     நாள்தொறும் வாடி வதங்கினராம்.

‘கூலிகள்’ என்றே இந்தியரைக்
     கூவி அழைத்தனர் வெள்ளையர்கள்.
கேலியும் கிண்டலும் செய்ததுடன்
     கேடுகள் செய்துமே வந்தனராம்.