ஒன்பது அடித்தால் இரவினிலே ஒருவரும் நடமாடக் கூடாதென்றார்; இந்தியர் வாக்கு வழங்கிடவும் ஏதும் உரிமைகள் இல்லைஎன்றார். கட்டாய வரியாக மூன்றுபவுன் கட்டவும் வேண்டுமாம் இந்தியர்கள். கட்டடம், நிலங்கள் வாங்குதற்கும் சட்டங்கள் போட்டனர் வெள்ளையர்கள். இந்தியர் வாழ்ந்திடும் ஊரிலெல்லாம் இருந்திடும் பதிவுப் புத்தகத்தில் இந்தியர் கையெழுத் திடுவதுடன் இரேகையும் வைத்திட வேண்டுமென்றார். “அடையாளச் சீட்டினைப் பெற்றிடுவீர். அதிகாரி கேட்டதும் காட்டிடுவீர். தடையேதும் கூறினால் சிறையினிலே தள்ளுவோம்” என்றனர் வெள்ளையர்கள். | | |
|
|