பக்கம் எண் :

22

பெரியோர் வாழ்விலே


     ஆமதாபாத்தில் காந்திஜி ஓர் ஆசிரமம் ஏற்படுத்தினார். அதில் ஆண்களும்,
பெண்களுமாக 25 பேர் இருந்தனர். எல்லோருக்கும் கஸ்தூரி பாய்தான் தாயாக
விளங்கினார். சமையல் சம்பந்தமான வேலைகளையெல்லாம் கஸ்தூரிபாய் கவனித்து
வந்தார்.

     அங்கு அடிக்கடி பலர் விஜயம் செய்வார்கள். சிலர் ‘திடீர் விஜயம்’ செய்வதும்
உண்டு. எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் கஸ்தூரிபாய்
உணவளிப்பார்.

     ஒருநாள், ஆசிரமவாசிகள் அனைவரும் பகல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, அவரவர்
வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கஸ்தூரிபாயும் சாப்பிட்ட பின் வேலைகளை
முடித்துக்கொண்டு பாயை விரித்துப் படுத்தார். வேலை செய்த அலுப்பினால் தூங்கி
விட்டார்.

     சிறிது நேரம் சென்றது. யாரோ ஆசிரமத்துக்குள் வரும் சத்தம் கேட்டது.

     காந்திஜி யாரென்று பார்த்தார். நேருஜியின் தந்தையான பண்டித மோதிலால்
நேருவும் சில நண்பர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

     அவர்கள் இன்னும் சாப்பிடவில்லை என்பதைக் காந்திஜி தெரிந்து கொண்டார்.
உடனே அவர் கஸ்தூரிபாயை எழுப்பவில்லை. மற்றவர்களை அனுப்பி, சாப்பாடு தயார்
செய்யச் சொன்னார்.

     அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகச் சமையல் வேலையில் ஈடுபட்டனர். அப்போது, ஓர்
அம்மாள் எடுத்த தட்டு, கைதவறிக் கீழே விழுந்து விட்டது!