36 | பெரியோர் வாழ்விலே | வலது காலைத் தூக்கி இடது தொடை மேல் போட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் நிற்கவில்லை. அந்த வலது முழங்காலை இரண்டு கைகளாலும் கட்டிப் பிடித்து, ஆட்டி ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் பாடத்தைக் கவனிக்காமல் அலட்சியமாக இருப்பதைப் பார்த்தார் சாமிநாதய்யர். ஆனாலும், அவனிடம் எதுவுமே கூறவில்லை.
அப்போது நடந்து கொண்டிருந்தது கம்பராமாயணப் பாடம். அனுமானைப் பற்றி வருகிற கட்டம். சாமிநாதய்யர் அனுமானைப் பற்றிக் கூறத் தொடங்கினார் :
“அனுமானோ பெரிய வீரன். அவன் இராவணனுடைய சபைக்குச் சென்றதும், இராவணன் அவனுக்கு ஆசனம் கொடுக்கவுமில்லை ; உட்காரச் சொல்லவுமில்லை. அனுமான் அதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை. இராவணனுடைய சிம்மாசனத்திற்குப் பக்கத்திலே, தன்னுடைய வாலைச் சுற்றிச் சுற்றி ஒரு பெரிய ஆசனத்தை உண்டாக்கி விட்டான் ! அது இராவணனுடைய சிம்மாசனத்தைவிட மிகவும் உயரமாயிருந்தது. அனுமான் ஒரே தாவில் அந்த ஆசனத்தின் மேல் தாவினான். கால் மேல் கால் போட்டு, முழங்காலை உயர்த்திக் கைகளால் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். அப்போது அனுமான் உட்கார்ந்திருந்தது எப்படி இருந்தது தெரியுமா? இதோ இந்த மாணவர் உட்கார்ந்திருக்கிறாரே, இப்படித்தான்” என்று கூறி முன் வரிசையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த மாணவனைச் சுட்டிக் காட்டினார். அவ்வளவு தான் ; மாணவர்கள் எல்லோரும் ஒரேயடியாக |
|
|
|
|