பக்கம் எண் :

ஆனந்த வருஷத்து அதிர்ஷ்டக் குழந்தை

37


வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிறிது நேரம் வரை சிரிப்பு ஓயவில்லை.

     அனுமார் கதை இப்படித் தன்னிடம் வந்து முடியும் என்று அந்த மாணவன் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத இதைக் கேட்டதும், அவன் திடுக்கிட்டான். மறுவிநாடியே
காலைச் சரியாக வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவமானத்தால் அவன் தலை
குனிந்தான்.

* * *

     சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, குறுந்தொகை,
புறநானூறு - இவைகளையெல்லாம் இன்று நாம் புத்தகங்களாகப் பார்க்கிறோம். இவற்றை
நமக்குப் பழைய ஏடுகளிலிருந்து எடுத்து, அச்சுப் போட்டுத் தந்தவர்தாம் தமிழ்த்
தாத்தாவாகிய சாமிநாதய்யரவர்கள். அவர் தமிழுக்குச் செய்த பெரும் தொண்டைப்
பாராட்டி அப்போது இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கில அரசினர் ‘மகாமகோபாத்தியாய’
என்னும் பட்டத்தை அவருக்குக் கொடுத்தார்கள்.

     அந்தப் பட்டம் கிடைத்ததைப் பாராட்டுவதற்காக ஒரு விழா ஏற்பாடு
செய்திருந்தார்கள். அவர் தமிழாசிரியராயிருந்த மாநிலக் கல்லூரியிலே தான் அந்த விழா
நடைபெற இருந்தது. மகாகவி பாரதியார் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். உடனே
அவருக்கு ஒரே ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் சாமிநாத அய்யரைப் பாராட்டி ஒரு
பாட்டு எழுதினார் ;  அந்தப்