பக்கம் எண் :

  

பதினான்கு வயதில்
பத்திரிகாசிரியர் !


     லாகூரில் ஒரு பெரிய சங்கம் இருந்தது. அது முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்டது.
அந்தச் சங்கத்துக்குப் பல பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றில், எல்லோரும்
மிக மிக விரும்பிப் படித்த பத்திரிகை ஒன்றே ஒன்றுதான். அதன் பெயர் ‘லைசானுஸ்
சிக்த்’ என்பது. தமிழிலே அதன் பெயரைக் கூற வேண்டுமானால் ‘சத்தியத்தின் குரல்’
என்று கூற வேண்டும்.