பக்கம் எண் :

54

பெரியோர் வாழ்விலே


கிடப்பதைக் கண்டு துடிதுடித்தாள். வாய்விட்டுக் கதறி அழுதாள். அக்கம்
பக்கத்திலிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். பையனின் பரிதாப நிலையைக் கண்டு
பதைபதைத்தனர்.

     உடனே அவனைத் தூக்கிக் கொண்டு அருகிலேயிருந்த ஒரு வைத்தியரிடம்
சென்றார்கள். அந்த வைத்தியர் பச்சிலை வைத்துக் கட்டினார். பத்தே நாட்களில் காயம்
குணமாகிவிட்டது.

     அன்று மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அச்சிறுவனைக் காப்பாற்றிய நாட்டு
வைத்தியருக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டும்.

     ஏன்?

     அந்தச் சிறுவன் பிற்காலத்தில் சுகமாகச் சாப்பிட்டு விட்டுச் சொந்த வேலையைப்
பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற உறுதியுடன்
நாட்டுக்கும், மொழிக்கும் எத்தனையோ வழிகளில் தொண்டாற்றி எல்லோருக்கும்
நல்லவனாக விளங்கினான். திரு.வி.க. என்ற நான்கு எழுத்துக்களைச் சொன்னவுடனே,
“ஓ !  அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாய்த் தெரியுமே !  தமிழ்த் தென்றல்,
தொழிலாளரின் தோழர், சிறந்த தேச பக்தர், உயர்ந்த பத்திரிகாசிரியர், அன்பே உருவான
அறிஞர் என்றெல்லாம் போற்றப்படும் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்தானே அவர் !” 
என்று கேட்கத் தொடங்கி விடுவீர்கள். ஆம், அன்று காற்றாடி எடுக்கப் போய்க்
காயம்பட்டு, நாட்டு வைத்தியரால் காப்பாற்றப்பட்ட சிறுவன் வேறுயாருமில்லை ; 
திரு.வி.க.தான் !  அதனால்தான் அந்த