 | சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர் ! | அவனோ மிகவும் சிறிய பையன், அவன் கையிலிருந்த சிலந்தியோ மிகவும் பெரிதாயிருந்தது. ஏதேதோ மருந்துகள் போட்டுப் பார்த்தார்கள் ; யார் யாரோ வைத்தியம் செய்து பார்த்தார்கள். சிலந்தி அமுங்கவுமில்லை ; பழுத்து உடையவுமில்லை.
சிலந்தி அப்படியே இருந்தாலும் குறைவில்லை ; நாளுக்கு நாள் அது பருத்துக்கொண்டே வந்தது. வலியும் அதிகரித்தது. ‘விண், விண்’ என்று தெறித்தது. பாவம், அந்தப் பையனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.
அவன் தைரியமான பையன் தான். ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு எத்தனை நாளைக்குத் |
|
|
|
|