சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர் | 55 | ஒரு சமயம் விவேகானந்தர் ரயிலில் இரண்டாம் வகுப்பிலே பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
சாதாரணமாக அவர் மூன்றாம் வகுப்பில் தான் செல்வார். ஆனால், அச்சமயம் ஒரு பெரிய பணக்காரர் அவருக்கு இரண்டாம் வகுப்பு ‘டிக்கெட்’ வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்திருந்தார்.
விவேகானந்தர் இருந்த வண்டியில் இரண்டு வெள்ளைக்காரர்களும் இருந்தனர். அவர்களுக்கு விவேகானந்தரைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது.
“இந்தப் பரதேசியைப் பாரடா ! பெட்டி இல்லை ; படுக்கை இல்லை ; சாப்பிட உணவும் இருப்பதாகத் தெரியவில்லை. காவி உடை உடுத்துக் கொண்டு கவலையில்லாமல் ‘கொழு கொழு’ என்று இருக்கிறானே !” என்றான் ஒருவன்.
“ஆமாம், இவன் கெட்ட கேட்டுக்கு இரண்டாம் வகுப்பு வேறு !” என்றான் மற்றவன்.
உடனே இருவரும் ‘கொல்’லென்று சிரித்தனர். இப்படியே அவர்கள் விவேகானந்தரைக் கேலி செய்து பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது அவர்களின் எண்ணம். இல்லாவிட்டால், அப்படி யெல்லாம் பேசத் துணிச்சல் வருமா?
வழியில் வண்டி ஒரு நிலையத்தில் நின்றது. உடனே, விவேகானந்தர் தலையை வெளியே நீட்டிப் பார்த்தார். ‘புகைவண்டி நிலையத் தலைவர்’ அங்கு வந்தார்.
அவரைப் பார்த்து, “இங்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா” என்று அழகாக ஆங்கிலத்தில் விவே |
|
|
|
|