56 | பெரியோர் வாழ்விலே | கானந்தர் கேட்டார். அவர் ஆங்கிலத்தில் பேசியதைக் கேட்டதும், அந்த ஆங்கிலேயர் இருவரும் திடுக்கிட்டனர். பிறகு, விவேகானந்தரை நோக்கி, “ஏனய்யா, உமக்கு ஆங்கிலம் கூடத் தெரியுமா? அப்படியானால், நாங்கள் இவ்வளவு நேரமாகப் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஏன் சும்மா இருந்தீர்?” என்று கேட்டனர்.
“நான் மூடர்களைக் காண்பது இது வன்று முதல் தடவை !” என்று அழுத்தம் திருத்தமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார் விவேகானந்தர்.
“என்ன, நாங்களா மூடர்கள் !” என்று கேட்டுக் கொண்டே இருவரும் விவேகானந்தரைத் தாக்க வந்தனர். விவேகானந்தர் பயந்துவிடவில்லை !
“ஓஹோ ! புத்தியைத்தான் உபயோகப்படுத்தத் தெரியவில்லை. சக்தியையாவது உபயோகப்படுத்தலாம் என்று பார்க்கிறீர்களா? நான் அதற்கும் தயார்தான். உம், வாருங்கள், பார்க்கலாம்” என்று கூறி சட்டை விளிம்புகளை மடித்துவிட்டுக் கொண்டே அருகில் வந்தார். அவருடைய திடமான உடலையும், திரண்ட தோள்களையும், வலிமை மிக்க கைகளையும் பார்த்த அவர்கள் நடுநடுங்கி விட்டனர். பேசாமல் பெட்டிப் பாம்புகள் போல் அடங்கி விட்டனர் ! (விவேகானந்தர்)
|  |
|
|
|
|