 | பதினோரு வயதில் பாட்டுக் கட்டியவர் ! | அப்போது தாகூருக்குப் பதினோரு வயதுதான் இருக்கும். அந்த வயதிலேயே அவர் அழகாகப் பாட்டுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டார் !
அவருடன் படித்த மாணர்களில் சிலர், “அடடா ! இவன் எவ்வளவு அழகாகப் பாடல்கள் எழுதுகிறான் !” என்று புகழ்ந்தார்கள். சிலர், “இவனாவது ; பாட்டு எழுதுவதாவது ! யாரோ இயற்றிய பாடல்களை எழுதி வைத்துக்கொண்டு கதை அளக்கிறான் !” என்றனர். |
|
|
|
|