64 | பெரியோர் வாழ்விலே | கண்டால், உடனே ஒரே பாய்ச்சலாக அதன் முதுகிலே பாயும். அப்புறம் யானையின் கதி அதோ கதி தான் ! என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
“ஐயோ ! இப்போது புலி வந்து யானையின் முதுகை நோக்கிப் பாய்ந்தால், என்ன செய்வது? இதன் முதுகில் நாமல்லவா இருக்கிறோம் ! நம் கதி என்னாகும் !” என்று நினைத்துப் பயந்துகொண்டே இருந்தார்.
ஓரிடத்தில் வந்ததும் யானை ‘சட்’டென்று நின்றது ! ‘என்ன விஷயம்?’ என்று தாகூர் மெதுவாகத் தலையை நீட்டிப் பார்த்தார். பார்த்ததும் திடுக்கிட்டார். ஒரு புலி அங்கே நின்று கொண்டிருந்தது ! ஆனால், நல்லகாலம், அது பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை ! வேகமாகப் புறமுதுகு காட்டி ஓட ஆரம்பித்தது. ‘நல்லவேளை ; இன்று நாம் தப்பி விட்டோம்’ என்று எண்ணித் தாகூர் மகிழ்ந்தார்.
‘நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சி அடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம் படித்து இன்புற முடியுமா? அல்லது, ‘நோபால் பரிசு பெற்ற கவிஞர் ஒருவர் எங்கள் நாட்டிலும் இருந்தார்’ என்று கூறி நாம் பெருமைப்படத்தான் முடியுமா? (தாகூர்)
|
|
|
|
|