பக்கம் எண் :

பதினோரு வயதில் பாட்டுக் கட்டியவர்

63


     தாகூர் சொன்னபடியே இயந்திரம் தயாராகி விட்டது. உடனே, தாகூர் ஆவலுடன்
பூக்களை உள்ளே கொட்டிச் சக்கரத்தைச் சுற்றிப்பார்த்தார். எவ்வளவு தான் சுற்றியும், ஒரு
சொட்டுச் சாறும் கிடைக்கவில்லை.

     ஏமாற்றத்துடன் தாகூர் கசங்கிய பூக்களைப் பார்த்தார். பார்த்ததும், “அடடே !  சற்று
முன்பு எவ்வளவு அழகாக இருந்தன இந்தப் பூக்கள் !  இப்போது, இப்படி
ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டனவே !  எல்லாம் அந்த இயந்திரத்தின் வேலை தான்”
என்று அந்த இயந்திரத்தை வெறுப்புடன் பார்த்தார்.

     அதற்குப் பின் தாகூர் எந்த இயந்திரத்தையும் தொடுவதே இல்லை. ‘ஸிதார்’ போன்ற
வாத்தியங்களைக் கூடத் தொடமாட்டாராம் ! 
 

* * *
 

     தாகூருடைய அண்ணாவுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம். ஒரு நாள் அவர்
தாகூரையும் அழைத்துக்கொண்டு யானையின் மீது ஏறி வேட்டைக்குப் புறப்பட்டார்.
யானைப் பாகனும் வந்தான்.

     யானை மிகவும் கம்பீரமாகக் காட்டுக்குள் நுழைந்தது. அப்போது தாகூருக்குப்
புலியைப் பற்றிய ஞாபகம் வந்தது. ‘புலி வந்துவிடுமோ !  புலி வந்துவிடுமோ !’  என்று
நினைத்து நினைத்துப் பயந்து கொண்டிருந்தார்.

     ஒரு சமயம் புலியைப் பற்றிப் பேசும்போது அவருடைய பள்ளித் தோழன், ‘புலி
யானையைக்